Sunday, 20 August 2017

வசையம்புகள்

வசையம்புகள்

கனவின் தேசத்தில் பறந்தவனை , 
வசையம்பொன்று வகையாய் பாய்க்க, 
சற்றைத் தடுமாறி பின் உயரவெழும் 
நம்பிக்கையில் உயிர்த்த தேகம், 
கனவினை உதறிவிட்டு மேகம் கிழித்து 
சிலிர்த்து நிமிரும் அவ் வொற்றைக் கணத்தில் , 
உடலில் பூர்த்த வசையம்பும், 
மிதத்தல் விதியின் பரத்தக் கம்பளமாய் மாறி, 
சுகிக்கும் வழிக்கே வழி காட்டும் ! 

--------------------------------------------

கற்றதன் பயனென்?

கற்றறி வில்லாதாவர் 
பெற்றேடுத்த பிள்ளைகள்
புத்தக புழுக்களாய் மாறி
புத்தி ஜீவிகளாய் உருமாறி
கற்றவர் கூட்டத்தில் சேர்ந்த பின்
அவர் பெற்றதன் பிள்ளைகள்
காண்டி கிராஷ் நோண்டிக் கொண்டு..
அப்பாக்கள்
கற்றதன் பயனென் ?

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts