ந.முத்துகுமார் அவர்களுக்கு அஞ்சலி!

.
உயில்
மகன் பிறந்த பிறகுதான்
அப்பாவின் பாசத்தை
அறிந்துகொள்ள முடிந்தது
என் அன்பு மகனே
உன் மகன் பிறந்ததும்
என்னை நீ அறிவாய்!
காதல்
பதின்வயதில் முதல்முறை ஓர்
பேய் பிடித்து ஆட்டுவது
நதிநீரில்
வலைவிரித்து
விண்மீன்கள்
மாட்டிவது
ரதி என்றும் ரம்பை
என்றும் ராப்பகலாய்
புலம்புவது
அதிகாலை அலாரம்
வைத்து விழித்திருந்து
நிறுத்துவது
மதில்சுவர்
நண்பர்களை
மறைந்திருந்து
கழட்டுவது
குதிரினிலே நெல்லை
போல் வார்த்தைகளை
நிரப்புவது
எதிரினிலே பார்த்து
விட்டால் வழக்கம்
போல் சொதப்புவது
பதில் தெரியா
கேள்வியுடன் பல
கடிதம் நீட்டுவது
முதிர்கண்ணன் ஆன பின்பும்
முதல் தழும்பை போற்றுவது
அதுதாம்பா காதல்
ந.முத்துகுமார்
No comments:
Post a Comment