பம்பரம்
தில்லையாடிச் சிதம்பரமாய்
ஒற்றைக்காலில் ஓரங்கம்
நிற்காமல் சுழன்றாடி ,
நிற்கும் தரையில் குழிப்பறித்துச்
சுற்றிப் பொரிக் கிளப்பி
தலைக் கனம் வீழும் அவ்வேளையில்,
சுற்றம் பார்த்துத் தலைக்கவிழ்ந்து ,
ஆட்டம் அடங்கி அலையும் நேரத்தில் ;
சாட்டை , அடுத்தொரு ஆட்டம்
துவங்கும் களிப்பில்
ஆட்டுவிப்பன் கைகளில் துள்ளியெழ
சற்றே தலைச் சாயும் பம்பரம் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment