
நிலவிலிருந்து வந்ததாகச் சொன்னாள்,
'அமாவாசையில் என்ன செய்வாய் ?' என்றேன் ,
என்னைப் பார்க்க வருவதாகச் சொல்கிறாள் ,
'பாட்டிக்குத் தெரியுமா ?' என்றேன்
பாட்டிதான், கொடுக்கச் சொன்னதாக,
இரண்டு வடைகளை என் கையில் கொடுத்தாள்,
'ம்...' இப்போதுதான் புரிகிறது
ஆண்கள் அல்வா கொடுப்பது போல்
பெண்களும் வடை கொடுக்கிறார்களென்று !
.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment