
நீயென்பதும்
நானென்பதும்
இல்லாதவொன்றில்தான்
நாம் உட்கார்ந்திருக்கிறோம்,
இலயனச் சொப்பனங்களில்
வார்த்தைகளைத் தேடி
வாசல்களை அலங்கரிக்கிறோம்,
காட்டுக் குருவிகளின் காதுகளில்
காதலைச் சொல்லி மகிழ்கிறோம்,
சின்னத் தூரல்களைச் சரம் தொடுத்து
சிற்றின்பம் தேடுகிறோம்,
முத்தம் என்பதை முகவரியாக்கி
முடிவில்லாப் பயணம் கொள்கிறோம்,
எட்ட நின்று பரிகசிக்கும் துர்க் காற்றை
இளம் நகையால் விரட்டுகிறோம்,
வானத்தைத் தரையிலிறக்கி
நிலவுக்கும் கவிதைச் சொல்கிறோம்,
என்றோ எதற்கோ சொல்லிய வார்த்தைகளில்
இடறி விழுந்து
இன்று நாம்தாம்
இருவேறு திசைகளிலும் பயணிக்கிறோம்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment