காதல் கண்ணாமூச்சி

காதல் சொல்வாயென்று
கவிதை சொல்லச் சொன்னேன்.
மரத்தையும்,நதியையும்
கவிதையாய் சொன்னாய்,
.கண்களை ரசிப்பாயென்று
"கண்ணில் தூசி" யென்றேன்
"கைக் குட்டையால்
ஒற்றியெடு" யென்றாய்,
ஒற்றை வார்த்தையில்
என்னை பற்றி சொல்லென்றேன்.
என் பெயரைச் சொன்னாய்,
காதலைப் பற்றி
என்ன நினைக்கிறாய்?" யென்றேன்,
"காதலித்த பின் சொல்கிறேன்"
என்றாய்,
உனக்கு, நான் யாரென்றேன்,"
"உனக்கு நான் யாரோ...,அது போல்தான்
எனக்கும் நீ யென்றாய்,
பொய்க் கோபம் காட்டி,
"போய் விடு!" என்றேன்.
நீயும் மெய்யாகவே போய் விட்டாய்,
என் நெஞ்சிலூன்றிய காதலை மட்டும்
அப்படியே விட்டுவிட்டு
- மு.முகமது பாட்சா

காதல் சொல்வாயென்று
கவிதை சொல்லச் சொன்னேன்.
மரத்தையும்,நதியையும்
கவிதையாய் சொன்னாய்,
.கண்களை ரசிப்பாயென்று
"கண்ணில் தூசி" யென்றேன்
"கைக் குட்டையால்
ஒற்றியெடு" யென்றாய்,
ஒற்றை வார்த்தையில்
என்னை பற்றி சொல்லென்றேன்.
என் பெயரைச் சொன்னாய்,
காதலைப் பற்றி
என்ன நினைக்கிறாய்?" யென்றேன்,
"காதலித்த பின் சொல்கிறேன்"
என்றாய்,
உனக்கு, நான் யாரென்றேன்,"
"உனக்கு நான் யாரோ...,அது போல்தான்
எனக்கும் நீ யென்றாய்,
பொய்க் கோபம் காட்டி,
"போய் விடு!" என்றேன்.
நீயும் மெய்யாகவே போய் விட்டாய்,
என் நெஞ்சிலூன்றிய காதலை மட்டும்
அப்படியே விட்டுவிட்டு
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment