Monday, 21 August 2017

வளரவேயில்லை

மொட்டை தலை போட்டு 
வட்டக் கண்ணாடி அணிந்தவர்தான் காந்தி ! 
பட்டைத் தொப்பியணிந்து 
ஒற்றை ரோசா நெஞ்சிலிருப்பவர் நேரு ! 
நதியாக நரையோட 
பாப் கட்டிங் சிகைக் காரர் இந்திரா ! 
இத்தனை சொல்லியும் 
குட்டியம்மாவிற்குப் புரியவேயில்லை... 
"ஏன் அவர்கள் வளரவேயில்லை ?" 
என்று கேட்கிறாள் 
மாறுவேட குழந்தைகளைப் பார்த்து ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts