
வனத்திற்குள் வலம் வரும் வார்த்தைகளை
பிரித்து வைக்கிறேன்...
அவை ஒவ்வொன்றும்
சில மரங்களைப் பிரசவிக்கிறது..
மரங்களின் வேர்களில் ஒரு யுகம் மறைந்திருப்பதாக
நாடோடிப் பாடல் இசைக்கிறது...
வெள்ளை நதியில் நனைந்து சிலிர்த்த பறவைகள்
கவிதைகளை ஏந்திப் பறக்கின்றன...
வேடன் வலை விரித்து உட்கார்ந்திருக்கிறேன்...
பறவைகளை வேட்டையாடி...கவிதைகளைச் சமைப்பதற்காக...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment