Monday, 7 August 2017

சுபுஹூ

சுபுஹூ

No automatic alt text available.

அதிகாலை நேரம்
பள்ளியில் பாங்கோசை
அதற்கு
பதில் சொல்வதாய்
புறாக்களின் குரலோசை!

புறாக்கள் மட்டும்
எப்படி
தங்களின்
சிறகுகளை அசைத்து
தொழுகைக்கு
அழைக்கிறது?

கதிரவன்
சற்று நேரத்தில்
சஜிதாவை விட்டு
எழுந்து விடுவான்!

தூக்கத்தை
கழற்றி வைத்தவர்கள்
விரைந்து
பள்ளிக்கு வருகிறார்கள்.

ஆம்.
அஸ்ஸலாத்து 
கைருன் மினன் நவ்ம்
தூக்கத்தை விட
தொழுகை மேலானது!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts