
இரும்புக் கவசம் அணிந்த ஒருவன்
சாதிய வாளை வீசுகிறான் ,
வீழ்கின்ற பிணங்கள் ஒவ்வொன்றும்
சாட்சியில்லாமல் சாய்ந்து கிடக்கின்றன ,
கைப் பிடியில்
அவன் கடவுளின் பெயர் ,
உதிரக் குளியலில்
சொர்கம் இருப்பதாகச் சொல்கிறான் ,
அவனுக்கு வாய்த்த அடிமைகள்
அதையும் பூசி மகிழ்கிறார்கள் ,
யோனிகளைக் கிழித்து ,கரு முட்டைகளில்
ஆம்லெட் ருசிக்கிறார்கள் ,
ரத்தக் களரியில் சத்திர விருந்து ,
உலர்ந்த ரத்தங்களில்
உரு மாற்றங்கள் நிகழ்கின்றன ,
வீழ்ந்த பிணங்களுக்கு, சிறகுகள் முளைக்கின்றன,
புறாக்களில்லாத தேசத்தில் ,அவை
கழுகுகளாக வட்டமடிக்கின்றன ,
இப்போது,
கவசக்காரனின் வாள் பாம்பாக மாறுகிறது ,
கழுகொன்று வாகாய் அதனைக் கவ்விச் செல்ல...,
கவசங்கள் உளுத்துக் கொட்டுகின்றன ,
மரணப் பயம் மண்டை முடியைப் பிடிச்சிழுக்க
பிடறித் தெறிக்க ஓடும் அவனை,
விரட்டித் தெறிக்கும் கழுகுகளின் கால்களி லெல்லாம்
அவனுக்கென்றே வாய்த்த அழகிய அடிமைகள் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment