
மூத்தோர் சொன்ன
வார்த்தை களெல்லாம்
முகவுரையா?-இல்லை
முடிவுரையா?
கனவுக்குள் வாழும்
மனிதா! - நீ
கரையினிலா? - இல்லை
கடலினிலா?
முடங்கிப் போன
நெஞ்சுக்குள்ளே
முகமிழந்தன முகவரிகள்
தடங்கல் கண்டு
நின்றுப் போனால்
சகுனம் தானே
தடைக் கற்கள்
சுட்டுகின்ற
குறைகளுக்குள்
தன் குறையை மறைக்கின்றாய்,
உன்னையே நீ செதுக்கு
நீயுமோர்
அழகிய சிற்பம்தான்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment