Thursday, 17 August 2017

தந்திர மொழி

Image may contain: one or more people and sunglasses

வழக்கொழிந்த மொழியொன்று 
வாழ்க்கை நடத்த வருகின்றது , 

மொழிகளின் தேசத்தில் 
முக்காடு போட்டு நுழைந்ததாம் 
அம் மொழி ,

சகதிகளைச் சந்தனமாய் 
பூசிக் கொள்ளச் சொல்கிறது ,

ஆட்சி மொழியாவதற்கு 
அதிகாரம் கேட்கிறது ,

தமிழின் விருட்ச வேர்களில் 
அமிலத்தை ஊற்றப் பார்க்கிறது,

பட்ட இலைகளும் ,பழம் மரத்தில் 
துளிர்த்து நிற்கும் அதிசயத்தில் 
பதுங்கி போகிறது அம் மொழி, 

விருட்ச வேர்களின் முனைகளில் 
விடம் இருப்பதும் அறியாமல் 
வடமிட்டேச் சாய்க்க பார்க்கிறது ... 
மெல்ல மெல்லச் சாகும் அம் மொழி . 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts