Monday, 14 August 2017

ஆகஸ்ட் 15ல்

ஆகஸ்ட் 15

Image may contain: sky

ஆகஸ்ட் 15ல்
பட்டி மன்றங்கள்
நடைபெறும்,

தேசியக் கொடி வியாபாரம்
கொடி கட்டிப் பறக்கும்,

சுட்டிக் குழந்தைகளுக்கு,
கொடியேற்றிப் பின்
மிட்டாய் கிடைக்கும்,

தேசமெங்கும்
தேசியக் கொடியாய் 
விளைந்திருக்கும்,

தொலைக் காட்சிகள்
காந்தியின்  படத்தை
மீள்மைப் படுத்தும்,

பென் கிங்ஸிலி நடிப்பை
பெருமையாய் பேசுவோம்,

தியாகிகளை யெல்லாம்
தூசித் தட்டி
அழகுச் செய்வோம்,

இத்துணை
கூத்துக்கும் நடுவே
பிள்ளைகள் கேட்பார்கள்,

'சுதந்திரம் எங்கேப்பா கிடைக்கும்?

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts