நா . முத்துகுமார்

.
மெளனமாய் ஒரு மரணம்
கவிதைகளைக் களவாடிச் சென்று விட்டது !
ஒரு கல், ஒரு கண்ணாடியின் மீது
மோதி விட்டது !
பட்டாம் பூச்சி விற்பவன் கைகளில்
பட்டாம் பூச்சிகளில்லை
சிறகுகளை இரவல் வாங்கியவன்
இவனும் சிறகடித்து விட்டான் !
கவிதைகளுக்குள் மூழ்கிப் போனவன்
மரணத்தில் மூழ்கி
முத்தெடுக்கவா போனான் ?
மதுவும், புகையும் கவிஞனை மட்டுமல்ல
கவிதைகளையும் சாகடிக்கும் !
மஞ்சள் காமாலை
மரணத்திற்கு ஒரு சாக்குதான் !
போய் வா முத்துகுமார் !
உன் கவிதைகளை
சாகாமல் பார்த்துக் கொள்கிறோம் !
- மு.முகமது பாட்சா
கவிஞரின் மறைவு அன்று எழுதப்பட்டது

.
மெளனமாய் ஒரு மரணம்
கவிதைகளைக் களவாடிச் சென்று விட்டது !
ஒரு கல், ஒரு கண்ணாடியின் மீது
மோதி விட்டது !
பட்டாம் பூச்சி விற்பவன் கைகளில்
பட்டாம் பூச்சிகளில்லை
சிறகுகளை இரவல் வாங்கியவன்
இவனும் சிறகடித்து விட்டான் !
கவிதைகளுக்குள் மூழ்கிப் போனவன்
மரணத்தில் மூழ்கி
முத்தெடுக்கவா போனான் ?
மதுவும், புகையும் கவிஞனை மட்டுமல்ல
கவிதைகளையும் சாகடிக்கும் !
மஞ்சள் காமாலை
மரணத்திற்கு ஒரு சாக்குதான் !
போய் வா முத்துகுமார் !
உன் கவிதைகளை
சாகாமல் பார்த்துக் கொள்கிறோம் !
- மு.முகமது பாட்சா
கவிஞரின் மறைவு அன்று எழுதப்பட்டது
No comments:
Post a Comment