கேள்வியாகும் கேள்விகள்

கேள்விகள்
இல்லாத உலகத்தில்
பதில்கள்
என்றும் இருப்பதில்லை,
கேள்விகளெல்லாம்
பதில்களை
தனக்குள்ளாகத்தான்
வைத்திருக்கின்றன,
கேள்விகள்
கேட்கத் தெரியாதவன்
அடிமையாகத்தான்
சாகிறான்,
பதிலேதும்
சொல்லத் தெரியாதவன்
அடக்கியாளப்
பார்க்கிறான்,
பெரியாரின் கேள்விகள்
பகுத்தறிவை
வளர்த்தன,
மார்ட்டினின் கேள்விகளும்
மார்க்ஸின் கேள்விகளும்
மாற்றுச் சிந்தனைக்குள்
நுழைந்தன,
கேள்விகளென்பது
வாழ்வியலின் வரம்,
கேட்கத் தொடங்குங்கள்...
பதில்கள்
நிச்சயம் கிடைக்கும்...
விடியலும்
நிச்சயமாகப் பிறக்கும்.
- மு.முகமது பாட்சா

கேள்விகள்
இல்லாத உலகத்தில்
பதில்கள்
என்றும் இருப்பதில்லை,
கேள்விகளெல்லாம்
பதில்களை
தனக்குள்ளாகத்தான்
வைத்திருக்கின்றன,
கேள்விகள்
கேட்கத் தெரியாதவன்
அடிமையாகத்தான்
சாகிறான்,
பதிலேதும்
சொல்லத் தெரியாதவன்
அடக்கியாளப்
பார்க்கிறான்,
பெரியாரின் கேள்விகள்
பகுத்தறிவை
வளர்த்தன,
மார்ட்டினின் கேள்விகளும்
மார்க்ஸின் கேள்விகளும்
மாற்றுச் சிந்தனைக்குள்
நுழைந்தன,
கேள்விகளென்பது
வாழ்வியலின் வரம்,
கேட்கத் தொடங்குங்கள்...
பதில்கள்
நிச்சயம் கிடைக்கும்...
விடியலும்
நிச்சயமாகப் பிறக்கும்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment