நட்பின் தோள்

என் கைகளுக்குள்
உன் கைகளைப் புதைத்திருக்கிறாய்...
அதன் நடுக்கம்
என் தோட்பட்டையில் கண்ணீராய் வழிகிறது,
உன் மூச்சுக் காற்றின்
தணல்கொழித்த சோகத்தை
நான் என்னுள் கடத்திக் கொள்கிறேன்,
இறுக்கம்
உன் தனிமையின் பயத்தை உணர்த்துகிறது...
எதுவும் சொல்ல வேண்டாம்
நன்றாக அழுதுவிடு...ஆம் நன்றாக அழுதுவிடு
என் நட்பே,
பிழைக் கவிதைகளைக் கிழித்தெறிய வேண்டும்
அல்லது
கொளுத்தியாவது குளிர் காய வேண்டும்...
மௌனத்தில் புதைத்து வைக்காதே
நாற்புறத்தீ
உன்னை மட்டுமல்ல
என்னையுமல்லவாக் கருக்கி ருசித்துவிடும்,
எழுத்துகளைக் கோர்க்காமல்
வார்த்தைகள் வளம் கொழிப்பதில்லை...
நட்பும் அப்படித்தான்
துன்பத்தைக் கூட என்னில் நுழைத்துவிடு
உன் நிம்மதியின் பெரு மூச்சில்
நானும் சற்று இளைப்பாறிக் கொள்கிறேன்.
- மு.முகமது பாட்சா

என் கைகளுக்குள்
உன் கைகளைப் புதைத்திருக்கிறாய்...
அதன் நடுக்கம்
என் தோட்பட்டையில் கண்ணீராய் வழிகிறது,
உன் மூச்சுக் காற்றின்
தணல்கொழித்த சோகத்தை
நான் என்னுள் கடத்திக் கொள்கிறேன்,
இறுக்கம்
உன் தனிமையின் பயத்தை உணர்த்துகிறது...
எதுவும் சொல்ல வேண்டாம்
நன்றாக அழுதுவிடு...ஆம் நன்றாக அழுதுவிடு
என் நட்பே,
பிழைக் கவிதைகளைக் கிழித்தெறிய வேண்டும்
அல்லது
கொளுத்தியாவது குளிர் காய வேண்டும்...
மௌனத்தில் புதைத்து வைக்காதே
நாற்புறத்தீ
உன்னை மட்டுமல்ல
என்னையுமல்லவாக் கருக்கி ருசித்துவிடும்,
எழுத்துகளைக் கோர்க்காமல்
வார்த்தைகள் வளம் கொழிப்பதில்லை...
நட்பும் அப்படித்தான்
துன்பத்தைக் கூட என்னில் நுழைத்துவிடு
உன் நிம்மதியின் பெரு மூச்சில்
நானும் சற்று இளைப்பாறிக் கொள்கிறேன்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment