Saturday, 5 August 2017

மாய வலை

Image may contain: one or more people

என்னைத் தேடிச் சென்ற போதுதான் 
நான் தொலைந்து போனதாக 
என் மனைவி சொன்னாள்,

கண்டு பிடித்துத் தருவதாகச் சொன்னவன் 
எல்லாமே, மாயையென்றான், 
அவன் மாய வலைக்குள் 
மயங்கிக் கிடக்கிறது ஒரு கூட்டம் ,

நிர்வாணம் பரிபூரணம் . 
ஒருவரை ஒருவர் உறித்துக் கொண்டு ,
ஒருவரை ஒருவர் விதைத்துக் கொண்டு , 
பிசுபிசுப்பில் சிக்கிக் கொண்டது சிறு மூளை, 

தேடுவதொன்றும் அத்தனை சுலபமல்ல , 
எதைக் கொண்டு வந்தாய் - நீ 
எதைத் தேடுகின்றாய் ....
கீதாமொழியைச் சொல்லி விட்டு 
தேடவும் சொல்கிறான், 

ஆசையைத் துறந்தவன் கழுத்தில் 
ஆடம்பர  முத்து மாலைகளெதற்கு ? 
அகப்படமால் நழுவச் சொல்கிறது மனசு ,

திரும்பிய என்னிடம்
கிடைத்து விட்டீர்களா ? என்றாள் மனைவி, 
வா,உன்னில் என்னைத் தேடுகிறேன் 
என்னில்,  உன்னை நீ தேடு .

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts