Friday, 4 August 2017

நாங்கள் இப்படித்தான்

நாங்கள் இப்படித்தான்

மறதி,
எங்களுக்குச் 
சொந்தமானது,

எதையும்
மறந்துவிடுவது...
எங்களுக்கு
மிகச் சுலபமானது,

ஓர் இழப்பை
இன்னொரு
இழப்பைக் கொண்டு
மறந்து விடுவோம்,

இன்னொர் இழப்பை
மற்றுமோர் இழப்பால்
ஈடுசெய்வோம்,

பலகீனத்தின் முதுகில்
சவாரி செய்வதால்
எங்களை, ஏமாற்றுதல்
யாருக்கும்
எளிதாய்ப் போகும்,

வீரியத்தைப்
பேசிக் கொண்டு
சுயத்தையும்
இழந்து விடுவோம்,

சுதந்திரத்தை
தேடுவதாய் சொல்லி
அடிமையாக
ஒப்பந்தம் போடுவோம்,

சதுரங்க ஆட்டத்தில்
பலகீனத்தை நகர்த்தி
தோற்றுப் போவோம்,

பலகீனத்திலமர்ந்து
மறதியை சுமக்கும் வரை
நாங்கள் என்றுமே 
இப்படிதான்!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts