பேசா மொழியே
கண்களில் காதலை காட்டு
காயமாகிறது மனசு!
000
வார்த்தைகளை
வாளாக வைத்து
வீசிக் கொண்டிருக்கின்றோம்...
காயம் படமால் வீசு,
வாழ்க்கையை சாகடித்து விடும் !
000
வார்த்தைகளால் காயம் பட்டே
சில மெளனங்கள்
மெளனங்களாகவே
இறக்கின்றன!
000
போதி மரத்தை
விறகாக்கி
விற்றுக் கொண்டிருந்தான்
புத்தன்!
சாகும் வரை
பிழைக்க வேண்டும்!
000
வார்த்தைகள் சுடுமென்றால்
புன்னகையால் அதை
பிடித்துக்கொள்!
000
அறுவாள்
எடுக்கத் தெரிந்தவனுக்கு
அறிவை
எடுக்கத் தெரியவில்லை!
000
சாகும் போதுதான்
தெரிந்தது..
சாதித்தது
எதுவும் இல்லையென்று!
000
அரசியல் பேசும் முன்
ஆபாசம் கற்றுக்கொள்
000
ஜாதியம்
அவன் கைப் பிடித்து
அழைத்துச் சென்றது...
மனித கூட்டத்தை விலக்கி!
000
அவள் கடித்து துப்பிய நகங்களில்
எத்தனை நிலாக்கள்!
-மு.முகமது பாட்சா
கண்களில் காதலை காட்டு
காயமாகிறது மனசு!
000
வார்த்தைகளை
வாளாக வைத்து
வீசிக் கொண்டிருக்கின்றோம்...
காயம் படமால் வீசு,
வாழ்க்கையை சாகடித்து விடும் !
000
வார்த்தைகளால் காயம் பட்டே
சில மெளனங்கள்
மெளனங்களாகவே
இறக்கின்றன!
000
போதி மரத்தை
விறகாக்கி
விற்றுக் கொண்டிருந்தான்
புத்தன்!
சாகும் வரை
பிழைக்க வேண்டும்!
000
வார்த்தைகள் சுடுமென்றால்
புன்னகையால் அதை
பிடித்துக்கொள்!
000
அறுவாள்
எடுக்கத் தெரிந்தவனுக்கு
அறிவை
எடுக்கத் தெரியவில்லை!
000
சாகும் போதுதான்
தெரிந்தது..
சாதித்தது
எதுவும் இல்லையென்று!
000
அரசியல் பேசும் முன்
ஆபாசம் கற்றுக்கொள்
000
ஜாதியம்
அவன் கைப் பிடித்து
அழைத்துச் சென்றது...
மனித கூட்டத்தை விலக்கி!
000
அவள் கடித்து துப்பிய நகங்களில்
எத்தனை நிலாக்கள்!
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment