Thursday, 10 August 2017

போதி மரம் விற்பனைக்கு

No automatic alt text available.

போதி மரம் 
வெட்டப் படுவதாகச் சொன்னார்கள், 
விறகுகளை வாங்கிச் செல்ல 
ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது ,

வேர்களில் மூலிகை குணம் இருப்பதாக 
ஒருவன் 
வியாபாரம் செய்து கொண்டிருந்தான் , 

இலைகளையெல்லாம் ஒருவன் சேகரித்தான்
புத்தனுக்கு 
நிழல் கொடுத்த  விசிறிகளாம் அவை ,

அமோக வியாபரிகள் 
அடுத்தப் போதி மரம் தேடி அலைகிறார்கள், 
கார்ப்ரேட் உலகில் 
எல்லாம் விலையாக்கி விடும் , நம்பிக்கை , 

பட்டா இல்லாத நிலத்தை 
வளைத்துப் போட்ட பிட்சுகள் 
ஆலயம் எழுப்பித் தூபம் காட்டுகிறார்கள் , 

போதி மரக்கன்றுகள்
அரசுடைமையாக்கப்பட்டு
காவலோடு கல்லா நிரப்பிக் கொண்டது,

அந்த வழியாகத் தான் போகின்றான், 
திரும்பி வந்த சித்தார்த்தன்....
  
போதி மரம் வெட்டிய இடத்தில் 
ஆசை மரம் துளிர்த்திருப்பது 
அவன் கண்களுக்கு மட்டுமே தெரிந்தது.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts