Friday, 11 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 28

காரணமாவது

Image may contain: 1 person, smiling, closeup

தலைக்குப் பதிலாக
கால்கள் முதலில் வெளியே வந்துதான்
நான் பிறந்தேனாம்.

தவழ்ந்த முதல் நாளிலேயே
தரை மண்ணை
நக்கினேனாம்.

சோறூட்டிய
முதல் தடவையிலேயே
துப்பாமல் சாப்பிட்டேனாம்.

பள்ளிக் கூடத்தில்
என்னை சேர்க்கப் போன
முதல் நாளில் தான்
தலைமையாசிரியர்
செத்துப் போனாராம்.

வேலை வாய்ப்பகத்தில்
பதியப்போன நாளில் தான்
ஆட்சி கவிழ்ந்ததாம்.

படித்து முடித்து,
முதல் வகுப்பில் தேறி
பத்தாண்டுகள் ஆன பின்னும்,
எனக்கு
வேலையெதுவும்
கிடைக்காமலிருப்பதுகூட
இதனால் தானாம்.

கவிஞர் மு.முருகேஷ் (அகநி பதிப்பகம்)

No comments:

Post a Comment

Popular Posts