Saturday, 19 August 2017

உட்கார்ந்திருந்தாலும்

கால் ஊனம் க்கான பட முடிவு

உட்கார்ந்திருப்பதொன்றும்
ஊனமில்லை

உட்கார்ந்திருப்பதும்
ஒரு தவம்தான்,
நான்
உட்கார்ந்தேயிருந்தாலும்
தரையில் வீழ்வதில்லை,
நிற்பவர்களின் முன்
நான் எப்போதும்
உட்கார்ந்தேயிருக்கிறேன்
கம்பீரமாக !
நான்
உட்கார்ந்துதான் இருந்தாலும்
நிற்க வைக்க முடிகிறது
என்னாலும் சிலரை,
ஆம்,
நான் இப்போது உணர்கிறேன்...
உட்கார்ந்திருப்பதும்
ஒரு உன்னத தவம்தான் !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts