
காலத் தச்சன் செய்த
மரப்பாச்சிப் பொம்மைக்கு
வெள்ளைப் புறாவொன்று
உயிர் கொடுத்துப் போகிறது,
காலத் தச்சன்
இறந்துகிடக்கிறான்
மரணத்தில் மர்மம் இருப்பதாக
உயிர் கொடுத்த புறா
சொல்லிவிட்டுப் பறக்கின்றது,
மரப்பாச்சியின் பற்களில்
இரத்தக் கறை ...
உதிரப்போக்கு
இடம் மாறிவிட்டதாம் ,
இரண்டு நாட்களாக
வெள்ளைப்புறாவைக் காணவில்லை ,
புறாவின் கறிச் சீரணிக்காமல்
மரப்பாச்சிப் பொம்மை
இறந்து கிடப்பதாக
யார் யாரோ
சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment