
பாதை தெரியாமல் பயணிக்கும்
எழுத்துகளை,
வழிகாட்டி அழைத்துச் செல்கிறது
நொண்டிப் புறாவொன்று ...
பயணிக்கும் வழியில்தான்
அந்தக் குயவனின் வீடு
கண்கள் இல்லாத அவன் ,
எழுத்துகளை வனைக்கின்றான்...
குதிரையாக நினைத்து
கழுதையாக உருவானது ...
கழுதையின் மேல் பயணிக்கிறது ,
நொண்டிப் புறா...
சகதியாற்றின் குறுக்கீட்டில்
பயணம் வெள்ளான் துறையில் நிற்க
காணாமல் போன கழுதை இதுதானென்று
வெள்ளானொருவன் வீட்டிற்கு
ஓட்டிச் செல்கிறான்...
காணாமல் போன கழுதைக்காக
காத்திருக்கிறது நொண்டிப் புறா !
பயணம் தெரியாத எழுத்துகளை
நொண்டிப் புறாவிடம் கொண்டு சேருங்கள்...
இந்தத் தடவை அது
குதிரையாக வனைய படலாம்...
குருட்டுக் குயவன்
அங்கேயேதான் காத்திருக்கிறான் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment