
காற்றின் தழுவலில்
கலைந்தாடும் அசைவுகளில்
வியர்வைச் சலனங்களில்
விளையும் செழுமைகளில்
பார்வைகள் கலத்தலில்
பாயுமிசைத் தூண்டலில்
பக்குவ அணுகலில்
பழகிடும் விரல்களில்
விரியும் புன்னகையில்
விளையும் மொழிகளில்
கவிதை மொழிதலில்
கரையும் நொடிகளில்
மூச்சின் பின்னலில்
முகவரி புனைதலில்
முழுமையில் மூழ்கையில்
முத்தொன்று எடுக்கையில்
இப்படியே தொடர்ந்திடும்
காதலும் வாழ்தலில்
சாதலும் காதலில் ......,
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment