ஒரு மலைப் பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்...

யாரைக் கூப்பிட்டாலும்
என்னைக் கூப்பிடுவதுபோல் இருக்கிறது
எதிரே மரத்தின் இலை அசையும் போதும்
பயம் தொற்றிக்கொள்கிறது
எனது நிழலைப் பார்த்தபோது
கூரிய ஆயுதங்களோடு
அது என்னைத் துரத்திவருகிறது.
எனது பெயரை திரும்பக் கூப்பிடுகிறாய்
அது எனது பெயரல்ல என்பது தெரிந்தும்.
எழுந்துநின்று வணங்குகிறேன்
வெவ்வேறு சைகைகள் காட்டி
என் இருப்பையே நிலைகுலையச் செய்கிறாய்.
எழுதிய பேனாவின் ரத்தத் துளியில்
வெற்றுத்தாள் நனைந்திட
எழுத்துகள் எதுவும் தெரியவில்லை.
ஒவ்வொருதடவையும் வெவ்வேறு வேண்டுதல்களோடு
கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன.
எனது பெயர் சொல்லி
என்னையே நான் கூப்பிட்டுக் கொள்கிறேன்
உட்கார்ந்திருந்த இருக்கை
திடீரென அசைகிறது.
ஒரு மலைப்பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்.
.
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்
சென்ற ஆண்டு இதே நாளில் இந்தக் கவிதையை என் முகநூலில்
பதிவு செய்திருக்கிறேன்...இன்று இதே நாளில் நம்மை விட்டு மறைந்துவிட்டார்...அன்னாருக்கு இதய பூர்வ அஞ்சலி!

யாரைக் கூப்பிட்டாலும்
என்னைக் கூப்பிடுவதுபோல் இருக்கிறது
எதிரே மரத்தின் இலை அசையும் போதும்
பயம் தொற்றிக்கொள்கிறது
எனது நிழலைப் பார்த்தபோது
கூரிய ஆயுதங்களோடு
அது என்னைத் துரத்திவருகிறது.
எனது பெயரை திரும்பக் கூப்பிடுகிறாய்
அது எனது பெயரல்ல என்பது தெரிந்தும்.
எழுந்துநின்று வணங்குகிறேன்
வெவ்வேறு சைகைகள் காட்டி
என் இருப்பையே நிலைகுலையச் செய்கிறாய்.
எழுதிய பேனாவின் ரத்தத் துளியில்
வெற்றுத்தாள் நனைந்திட
எழுத்துகள் எதுவும் தெரியவில்லை.
ஒவ்வொருதடவையும் வெவ்வேறு வேண்டுதல்களோடு
கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன.
எனது பெயர் சொல்லி
என்னையே நான் கூப்பிட்டுக் கொள்கிறேன்
உட்கார்ந்திருந்த இருக்கை
திடீரென அசைகிறது.
ஒரு மலைப்பாம்பின் மீது அமர்ந்திருக்கின்றேன்.
.
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்
சென்ற ஆண்டு இதே நாளில் இந்தக் கவிதையை என் முகநூலில்
பதிவு செய்திருக்கிறேன்...இன்று இதே நாளில் நம்மை விட்டு மறைந்துவிட்டார்...அன்னாருக்கு இதய பூர்வ அஞ்சலி!
No comments:
Post a Comment