Saturday, 19 August 2017

காதலை பயிர் செய்வோம்

தொடர்புடைய படம்

நான்
எங்கேயிருக்கிறேன் என்று
என்னைத் தேடிக் கொண்டிருந்தேன்,
நீதான்
என்னை கண்டுபிடித்துக் கொடுத்தாய்,
என் சுவற்றினில்
ஓர் ஒளிக் கீற்றை வரைந்து வைத்தேன்,
அஃது உன் நினைவுகளால்
பிரகாசித்துக் கொண்டிருக்கிறது,
விழுந்து கிடந்த நரம்பு மண்டலத்தையே
உன் ஒற்றை முத்தத்தால் 
உயிர் கொடுத்தெழுப்பினாய்,
மழைத் துளிகளில்
உன் பெயரை எழுதி வைத்திருக்கிறேன்,
என் உற்சாகம் குறையாமல்
அஃதென்னை எழுப்பிக் கொண்டேயிருக்கிறது,
பாலைவனத்தில் ரோஜாக்களை
பயிரிட கற்றுக் கொடுத்தவளே நீதான்,
அவை காதலையல்லவா 
சுவாசித்துக் கொண்டிருக்கிறது,
என் விழிகளில் பயிரிட்ட உனதன்பு...
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது,
இப்போது கூட அதன் கீழ் நின்றுதான்
இந்தக் கவிதையை எழுதுகிறேன்,
தாஜ் மஹாலுக்கும் கூட வியர்க்கிறதாம்...
வா இளம் காற்றை வீசிவிட்டு வருவோம்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts