Tuesday, 8 August 2017

நான் இரசித்த கவிதைகள் - 23


இறைவனின் காதுகள்

Image may contain: 1 person, beard

வெகுகாலமாயிற்று 
விளங்கிக்கொள்ள 
நம்முடையதைப்போலல்ல 
இறைவனின் காதுகள் என


கூட்டுப்பிரார்த்தனையில் ஒருநாள் 
கதறிக் கதறி கையேந்தினார் ஒருவர் 
அழுதழுது கேட்டார் ஒருவர் 
கேட்டதா என்றேன் 
வந்து சேரவேயில்லையே என்றான்


சிரித்துக்கொண்டே 
வேதனைப்பட்டேன் 

ஏழுவானம் தாண்டும் சப்தம் 
எழுப்பமுடியுமா மனிதனால் என 
ஏன் எட்டவில்லை என்றேன்


காற்றை மட்டும் கொண்டு யாருமென் 
கதவைத் திறக்கமுடியாதென்றான் 

அரபியில் கேட்டால் அர்ஷை அடையுமா 
உர்துவில் கேட்டால் உன்னைச்சேருமா 
தமிழில் கேட்டால் தவறுதான் என்ன 
என்றெல்லாம் கேட்டேன் 

மறுபடியும் புன்னகை 
புன்னகையின் பிரகாசத்தில் 
உருகிப்போயின 
தூசுபடிந்து கீறல்கள் விழுந்த 
என் வார்த்தைக் கண்ணாடிகள்

ஐயமற அறிந்துகொண்டேன் 
இப்போது நான்
இறைவனுடைய காதுகள் 
நம்முடையதைப் போலல்ல என

.
- கவிஞர் நாகூர் ரூமி

No comments:

Post a Comment

Popular Posts