
தேசிய கொடி காத்திருக்கிறது
முக்கிய நபரின் வருகைக்காக,
அமைச்சரான பின்புதான்
அவருக்கு இத்தனை அதிகாரம் ,
ஆராவாரம் செய்ய ஆட்களும் தயார்,
ஆயிரம் வெடி ,அதுவும் ரெடி ,
காட்சி ஊர்வலம் கணக்காய்தான் இருக்கிறது,
ஆடிக்காரில் வந்தவுடன்
உயரப் பறக்குது தேசிய கொடி,
லட்டும் பறக்குது வீடியோவும் ரெடி
கணைப்புடன் பேச்சு விரிவாய்த் தொடங்குது ,
காந்தி, நேருவை மறக்காத பேச்சு,
வெள்ளையனை விரட்டியதாய் பெரும் வீச்சு ,
அன்னிய முதலீட்டையும் மறவாதப் பேச்சு ,
அணு உலை நுழைக்கத் தந்திர வீச்சு,
மதுக் கடைகள் குறைப்பதாய் மாயப் பேச்சு,
கல்விக் கொள்கையில் மந்திரச் சூழ்ச்சி,
தாழ்மை,ஏழ்மை ஒழிந்ததாயும் பேச்சு,
தாராளம், பணம் புழங்குவதாய்தான் வீச்சு,
விற்பனைத் தந்திர நிறைவுடன் பேச்சு
சுதந்திர தினமும் கூட அவருடனே போச்சி,
தேசிய கீதமும் இப்போது அனாதையாச்சி.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment