Friday, 18 August 2017

பொஸ்தகம் வாங்கலையோ

Image may contain: 1 person

நானெழுதிய புத்தகம் 
நாற்பது ரூபாய் , 
நானெழுதிய புத்தகம் 
அறுபது ரூபாய் ! 

நானொரு கதை சொல்லி 
நானொரு கவிதை பாடி 

பூ வாங்கலயோ பூவூ 
மல்லிப் பூ முழம் நாலு ரூபா 
முல்லைப் பூ முழம் மூணு ரூபா ! 

அள்ளிக்கோ அள்ளிக்கோ 
கத்தரிக்காய் கால் கிலோ பத்து ரூபா 
அவரைக்காய் கால் கிலோ ஆறு ரூபா ! 

நானெழுதிய புத்தகம் 
நாற்பது ரூபாய் , 
நானெழுதிய புத்தகம் 
அறுபது ரூபாய் ! 

ஏன் சாமி , 
பொஸ்தவம் இன்னுமா விக்கல ? 
நேரம் போச்சி சாமி 
போயிட்டு நாளைக்கு வா ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts