நறுக்கென்று

தீட்டு தீட்டு என்கிறாய் ,
தீட்டிக் கொண்டு
வரப் போகிறார்கள் !
அஞ்சல் பெட்டிக்குள்
அடங்கிக் கிடக்கிறது
என்
அந்தக் காலக் கடிதங்கள்!
"மழை வருகிறது
வயலுக்கு போகணும்"
என்கிறார், அப்பா!
நகர வாழ்க்கைக்குள்
இன்னமும்
நுழைய முடியாமல்!
கோவிலுக்குள் நுழைய
தகுதி கேட்டச் சமுகம்...
வாக்குச்சாவடிக்குள் நுழைய
அதையேன் கேட்கவில்லை?
மரண குழி எடுத்தவனுக்கும்
ஒரு நிமிடம
நினைவில் வந்துபோகிறது
அவனது மரணம்!
வீழ்ச்சிக்கு
விதி காரணமில்லை...
என்று தெரிந்தபோது
முதுமையென்னை
முத்தமிட்டுக் கொண்டிருந்தது!
இதழ் விரித்த பெட்டகத்தில்
உதிர்கிறது
புன்னகைப் பூக்கள்!
- மு.முகமது பாட்சா

தீட்டு தீட்டு என்கிறாய் ,
தீட்டிக் கொண்டு
வரப் போகிறார்கள் !
அஞ்சல் பெட்டிக்குள்
அடங்கிக் கிடக்கிறது
என்
அந்தக் காலக் கடிதங்கள்!
"மழை வருகிறது
வயலுக்கு போகணும்"
என்கிறார், அப்பா!
நகர வாழ்க்கைக்குள்
இன்னமும்
நுழைய முடியாமல்!
கோவிலுக்குள் நுழைய
தகுதி கேட்டச் சமுகம்...
வாக்குச்சாவடிக்குள் நுழைய
அதையேன் கேட்கவில்லை?
மரண குழி எடுத்தவனுக்கும்
ஒரு நிமிடம
நினைவில் வந்துபோகிறது
அவனது மரணம்!
வீழ்ச்சிக்கு
விதி காரணமில்லை...
என்று தெரிந்தபோது
முதுமையென்னை
முத்தமிட்டுக் கொண்டிருந்தது!
இதழ் விரித்த பெட்டகத்தில்
உதிர்கிறது
புன்னகைப் பூக்கள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment