
என் மரணத்தின்
வாசனையை
பருகும் ஒரு நாளில்
உறவுகள்
என்கிற நீங்கள்
இறுதி ஓலங்களையும்
கண்ணீரையும்
பிரகடனப் படுத்துவதில்
எனக்கு உடன்பாடில்லை
நான் வாழும்
நாட்களில்
எனக்காகப் பிரார்த்திக்காதவர்கள் நீங்கள்.
*******
.
ஆதித் தளம்
ஆலமுல் அர்வாவில்
எனக்கான
கேள்விகள் தொடுக்கப்படும்,
அந்நாளில்
நான் பேசிய
புறம் என்கிற
சொற்கள் தோற்றுக்கிடக்கும்
பாவியான
யாரோ ஒருவன்
என் நன்மைகளின் சிபார்சில்
சுவனம் நுழைவான்
அவனது
பாவங்களைச் சுமந்தபடி
மௌனமாய் வெடிக்கும் தனிமையில்
நான் பேசிய
புறம்
என்னை நரகின் எல்லைவரை
அழைத்துப் போகும்.
.
ஏ நஸ்புள்ளாஹ் (இலங்கை)
No comments:
Post a Comment