Monday, 7 August 2017

தனியாக கப்பலுக்குள்

தொடர்புடைய படம்

மூழ்காதக் கப்பலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
என்னை எங்காவது பார்த்தாயா? 
களவாடியக் கப்பலின் தேவதை நீ தானே... 

என் தேவதையின் இராச்சியத்தில் 
நான் சேவகனாகத்தான் இருக்கிறேன்... 
பார்க்காத தேவனுக்கேன்  பாத பூசைகள் செய்கிறாய்?

பூசித்த பொருட்களெல்லாம் 
புற்களில் வீணாய் இரைந்து கிடக்கின்றன 
வாடியப் பூக்களுக்கும்  பதில் சொல்லிவிட்டுப் போ, 

உன் ஒற்றைச் சொல்லில் மதுவின் நுரை நிரம்பி வழிகிறது 
பார்வை ரசத்தையும் கொஞ்சமதில் ஊற்றிவிட்டு போ. 
பருகிவிட்டு நான் உளறித் திரிகிறேன்... 

நான் உளறிய வார்த்தைகளெல்லாம் வடிவம் கோர்த்து 
உன்னோடுதான் பேசிக் கொண்டிருக்கின்றன... 
விழுந்து கிடக்கிறேன் நான் மட்டும் தனியாக கப்பலுக்குள்? 

மூழ்காதக் கப்பலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கிறேன் 
என்னை எங்காவது பார்த்தாயா? 
களவாடியக் கப்பலின் தேவதை நீ தானே.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts