Sunday, 20 August 2017

கனவுகளின்...

No automatic alt text available.

ஆதிக்கும் அந்தத்திற்கும் 
தொடர்பில்லாமல் சுற்றித் திரியும் கனவுகளைப் 
பெருவெளியில் புதைத்து வைக்கிறேன், 
மௌனம் சூழ்வெளியில் 
ஓர் ஆங்காரக் காற்றுச் சுழன்றடிக்கிறது, 
புதைத்தவிடத்தில் முளைத்த புற்களை, 
மேய்ந்த ஆடுகள் இறந்து கிடக்கின்றன, 
காட்டுப் புழுக்கள் 
கனவுகளின் கண்களைத் தின்று கொழுக்கின்றது, 
துர் நாற்றக் காற்றில் 
மூர்ச்சித்த பறவைகளையெழுப்பும் தேவன் , 
அசதியில் உறங்கிப் போகிறான், 
இருட்டை உடுத்திக் கொண்ட கனவுகள், 
வரம்பில்லாப் பாலையில் , 
நிழலைத் தேடியலைகின்றன... 
தாகத்திற்குக் கானலில் நீரருந்துகின்றன, 
சாத்தானின் ஆசியோடு தேடியடைந்த போது... 
என்னை எல்லோரும் 
புதைத்துக் கொண்டிருந்தார்கள்,

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts