
ஊஞ்சலாடும் உணர்ச்சிக் கட்டிலில்
உட்கார்ந்தாடும் பதுமை நான் !
ஆட்டுவிப்பவன் சிரிக்கின்றான்,
ஆடுகின்றவன் அழுகின்றேன் !
வேகமான ஆட்ட அசைவுகளில்
வேகமாக மேலெழுகின்றேன் ,
பூமியின் இயற்கை விசையென்னை
வேகமாகவே கீழே இழுக்கின்றது !
ஏற்ற இறக்கங்கள் இருந்தால்தான்
ஊஞ்சலாட்டம் உறுதியாகுமாம் !
ஊஞ்சலின் வேகம் மெல்லக் குறைகின்றது ,
ஒன்று எழுந்து நிற்பேன் !
இல்லையென்றால் பிறர் நகைக்க
கீழே சட்டென்று வீழ்வேன் !
ஊஞ்சலாடும் உணர்ச்சிக் கட்டிலில்
உட்கார்ந்தாடும் பதுமை நான் !
உடையாமல் எழுவதும் ,வீழ்வதும்
என் கைகளில் ஒன்றுமேயில்லை !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment