Saturday, 12 August 2017

கடிதங்கள்

No automatic alt text available.

என் செல்பேசிக்குள் 
லட்சம் காதுகள் 
முளைத்திருக்கின்றன ,

என் தனிமைகளை 
நானே 
திருடு கொடுக்கிறேன்,

எனது வங்கிக் கணக்கில் 
எவனோ 
பணம் எடுத்துப் போகிறான் , 

அம்முவிற்கும் 
என் செல்பேசிதான் 
விளையாட்டு மைதானம் , 

பார்வை 
குறைவிற்குக் காரணம் 
செல்பேசியாகவும் இருக்கலாம் ,

அப்படியொன்றும் 
வயதாகவில்லை ,ஆனாலும் 
காது கேட்பது சற்று மந்தம்தான்,

அப்பாவின் கடிதங்களை 
பிரித்துப் படிக்கிறேன் , 
தாத்தாவின் பாசம் 
வார்த்தைகளாய் வாழ்கின்றது , 

என் செல்பேசிக்கு 
அப்படியொன்றும் வரலாறு 
இருக்கப் போவதில்லை ,

'என்ன ம...க்கு 
விஞ்ஞானம் வளர்ந்திருக்கு?' 
என்று , இந்தக் கவிதையை 
எழுதிதான் முடிப்பேன் , 

என் பேரன் சொல்லலாம் 
இது 
தாத்தாவின் கவிதையென்று ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts