Friday, 18 August 2017

ஜன்னல்களின் ஓரம்

ஜன்னலின்  ஓரம்...



சில,
ஜன்னல்களின் ஓரம் மட்டும்
அனல் காற்று வீசுகிறது,

முதிர் கன்னிகளின்
மூச்சு காற்றாக இருக்குமோ?

வேலைத் தேடி
அலுத்துப் போனவர்களின்
அனல் காற்றா?

நசுக்கப் பட்ட வர்கத்தின்
தனல் தவிப்பாகவும் இருக்கலாம்,

பெண் பிள்ளை பெற்றோரின்
வயிற்று நெருப்பா?

அரசியல் வாதிகளின்
அடக்கு முறையில்;
முகவரி இழந்தவர்கள்,
மூட்டிய நெருப்பா?

தயவு செய்து
உங்கள் ஜன்னல்களை
மூடி வையுங்கள்...
வெப்பம்
தாங்க முடிய வில்லை!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts