Thursday, 3 August 2017

ஒற்றை சங்கேதம் போதும்

No automatic alt text available.

நான், 
உன் ஒரு சொல் நெய்கிறேன் 
நீ நட்சத்திரங்கள் வரைகிறாய், 
நிலவை வீட்டிற்கு அனுப்பி விட்டேன் 
நீயிருக்க அதுவெதற்கு? 
மேகத்தால் மறைத்துக் கொள்கிறாய் 
குளிர்த்தி மழையாக்கி 
மேகத்தைத் தொலைக்கிறேன்... 
புன்னகையில் வெளிச்சம் கூட்டுகிறாய் 
காடுகள் சிலிர்க்கின்றன... 
நீ வீசிய ஆயுதம்தான் எது? 
மனசைப் பிசைகின்றது... 
பட்டாம் பூச்சிகளை இதழில் கடத்தி 
இதழில் பூசுகிறேன், 
வண்ணம் பூக்கிறாய் 
நான் வடிவம் தொலைக்கிறேன்... 
தேடுதலைத் தொடங்கி விட்டாய் 
நீயொரு சிட்டுக் குருவி... 
நான் இரையாக இருக்கிறேன், 
தூக்கம் நம்மைச் சபிக்கிறது... 
இரவோ நம்மை இரசிக்கிறது... 
வா 
நாம் ஒருவரையொருவர் 
கடத்திப் போவோம், 
காரணங்கள் தேவையில்லை... 
காதலென்ற 
 ஒற்றை இரகசிய வார்த்தைப் போதும். 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts