Tuesday, 1 August 2017

கை விடப் பட்டவள்

கை விடப் பட்டவள்

Image result for crying indian poor lady painting

மிகவும் பலகீனமாக இருந்தாள், 
கண்கள் குழிகளுக்குள் உட்கார்ந்திருந்தன, 
கிழிசல்களைக் கொண்டு மறைத்தவள் 
எலும்புகளை மறைக்க முடியவில்லை, 
அவள் தப்பித்து வந்தவள் போல் 
ஆசுவாச மூச்சிறைத்தாள், 
உடலெங்கும் 
காயங்கள் வன் புணர்ந்திருந்தன, 
யாரென்று கேட்டதற்கு 
உங்களின் அம்மா நான்தான் என்றாள், 
ஆச்சரியமாகப் பார்த்தோம்... 
நீங்களெல்லோரும் 
என்னைக் கை விட்டீர்களென்றாள், 
கண்ணீர் பெருக்கெடுத்தாள், 
கலக்கமாகத்தான் இருந்தது... 
மன நிலை பிறழ்வில் 
பிதற்றுகிறாளென நினைத்தோம், 
அடிமைச் சோறு சாப்பிட 
அனைவரையும் சபித்தாள்... 
அவள் யாரென்று 
தன்னைச் சொல்லிக் கொள்ளவேயில்லை.. 
முடிந்தவரை ஓடுகிறேன் என 
மறுபடியும் ஓடத் தொடங்கினாள்... 
நாங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தோம், 
அவள் நின்றவிடத்தில் ஒலித்ததொரு பாடல் 
"முப்பது கோடி முகமுடையாள் 
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் 
இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் 
எனில் சிந்தனை ஒன்றுடையாள்" 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts