Tuesday, 1 August 2017

வா பேசுவோம்

lovers painting க்கான பட முடிவு

வா 
நாமிருவரும் 
ஏதாவது பேசிக் கொண்டிருப்போம், 
சரத்சந்திரரின் தேவதாஸை பற்றி... 
சிவாஜியின் முதல் மரியாதை பற்றி... 
ரூமியின் கவிதைகள் பற்றி... 
நானெழுதும் படைப்புகள் பற்றி... 
எதைப் பற்றிப் பேசினாலும் 
காதல் மட்டும் 
கலந்திருக்கும் படி பேசுவோம், 
பேசும் போது 
விழிகளைத் தாழ்த்திக் கொள்ளாதே... 
விருந்தின் சுவை இறந்துவிடும், 
உன் விரல் பிடித்துக் கவிதை எழுதுகிறேன் 
நீ வார்த்தைகளை அதில் கடத்து, 
காதலை மட்டும் சொல்லிவிடாதே 
அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுவோம், 
குடும்பக் கதைகள் நிச்சயம் வேண்டாம்... 
தடைகள் எங்காவது ஒளிந்திருக்கும், 
நீ நீயாக மடியில் உறங்கு 
இமை கொட்டாமல் 
ஒரு நீண்டக் கவிதை எழுதிக் கொள்கிறேன், 
பிரியும் போது 
விரல்களில் சின்ன முத்தம் கொடு போதும்.. 
அடுத்தச் சந்திப்பின் வரை 
அஃது இனித்துக் கொண்டேயிருக்கும்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts