Tuesday, 1 August 2017

சஞ்சீவினி

Image may contain: plant and nature


சஞ்சீவினித் தேடியலுத்த அனுமன் 
மகேந்திரகிரியில் பெயர்த்தெடுத்த 
சஞ்சீவி மலையை 
ஶ்ரீலங்கையில் நிறுத்திப் 
பறித்த மூலிகையில் உயிர்த்த இலக்குவன் 
பின்னர் எப்படிதான் மரித்தானோ ? 

அமேசான் காடுகளில்தான் வளர்கிறதாம் 
முடிகளுக்கான மூலிகைகள் ! 
இரு நாலிலக்க எண்களில் 
தொலைகாட்சிகள் 
வழுக்கைத் தலைகளைத் தடவுகின்றன ! 

அரசாங்கமே தேடுகின்றதாம் சஞ்சீவினி...! 
சாதியக் கொலைகளுக்கு 
மாற்றாக இருக்க இம் மருந்திற்கு 
சற்றும் வாய்ப்பே யில்லை ! 

சாகா மருந்தாகவும் இருக்க 
நிச்சயம் சாத்தியமில்லை ! 

வெட்டாத கிணற்றைத் தேடும் 
தலையாரிக் கணக்காய் 
வற்றாதுத் தொடரும் 
இம் மூலிகையின் தேடல்கள் ! 

வைப்பாட்டியின் வயல்களில் 
நீர்ப் பாய்ச்ச; 
கிணறு வெட்ட, களையெடுக்க 
கணக்கில் சேரலாம் 
கணக்காய்ச் சில தேடல்கள் ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts