Thursday, 3 August 2017

கூரனின் பசி

கூரனின் பசி

வெறித்த கண்களின் 
காமம் குரூர்த்தப் பார்வையில் 
மரித்த தேகத்தின் 
உருத்த நோவினில் 
மிகுத்த தூமையில் 
முகம் புதைத்த காமனே ! 
சிறுத்த அறிவினில் 
பெண்மைச் சிதைத்த சிறுமையே! 
பொருத்த உறுப்புகள் 
உன்னை மதிக்கும் தாய்மைக்கும் 
மறந்தா போனாய் ? 
வெறுத்த தேகம் 
உதிரம் மிகுத்தே கிடக்கும் 
குடிக்கும் கூரன் பசிக்கும் 
பெண்மைஇரையாமோ? 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts