
காதல் கனவுகளில்
காமம் பயிற்றுவித்தவனை
கட்டிலில் கழற்றிவிட்டு எழுந்தாள் ,
உள்ளாடைப் பிசுபிசுப்பின்
அறுவெறுப்பில்
ஆடியில் உமிழ்ந்து கொண்டால் ,
மாய வலையில் வீழ்வது
வாடிக்கையாகி விட்டது ,
தூக்கம் தொலைத்த இரவின் வீக்கத்தை
குளிர்ந்த நீரில் குளிப்பாட்டினாள் ,
தோசைச் சுடும் அலுப்பில்
பிரட்டும் டீயும் போதுமானது ,
ஆடைகளை மாற்றும் போது
மார்பகத்தை முட்டிப் பார்த்தக் கண்கள்
நினைவிற்கு வந்து போகிறது ,
ஸ்கூட்டிதான் வாகன மென்றாலும்
விரட்டிவர இரண்டு பேர் இருபார்கள் ,
அலுவலகத்தில்...
வாட்ச் மேன் வணக்கத்தில் நழுவி
உள்ளே விழுந்ததும்
சுற்றிச் சுற்றி வருகின்றன சில ஈக்கள் ,
அதிகாரியின் அப்பா வயசை
சந்தேகத்தில்
அலசிப் போடும் மனக் குரங்கு ,
தெரிந்த விசயத்தை
தெரியவில்லையென்று நிற்பான் சில பேர் ,
கண்கள்
ஆடை நழுவிய இடங்களை
ஆராய்ச்சிச் செய்யும் ,
அவள் கண்கள் மட்டும் உத்தமமில்லை ,
அவளுக்கான அவனை உரித்துப் பார்த்து ரசிக்கும்,
அவன்தான் அடிக்கடி அவள் கட்டிலில்
இரவுகளைத் திருடி, காமம் கற்பிப்பவன் ,
காதலன் ஆவானா? கணவன் ஆவானா?
காலம்தான் முடிவுச் செய்யும் ,
அவனுக்கும் மனைவி மகள்கள் இருக்கலாம் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment