
எச்சிலைக்குப் போட்டியிட்டு
ஓடிவந்த களைப்பில்
நாய்க்கும் தான்
நாவில் வேர்த்தொழுகும் !
பட்டினிக்கும் பசிக்கும்தான்
பாழ்வயிறும் கூச்சலிடும்!
மிச்சம் மீர்ந்த உணவுகளை
எச்சிலாக்க வேண்டாமே ,
குப்பைகளில் போடுவதால்
குடியொன்றும் உயர்வதில்லை !
காத்திருக்கும் ஏழைக்கு
கருணையுடன் கொடுத்திடுங்கள்,
காலமுள்ள காலம் மட்டும்
வாழ்த்திடுமே பசி வயிறும்!
.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment